விடாமுயற்சியை அடுத்து குட் பேட் அக்லியிலும் இணைந்த திரிஷா
Advertisement
Advertisement
விடாமுயற்சியை அடுத்து குட் பேட் அக்லியிலும் இணைந்த திரிஷா
ஆக 08, 2024
அ நிறம் | அளவு
Advertisement
மார்க் ஆண்டனி படத்தை அடுத்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்துள்ள திரிஷாவும் குட் பேட் அக்லியில் இணைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் த்ரிஷா, லீலா என இரண்டு நடிகைகள் நடிப்பது தெரியவந்துள்ளது. மேலும் விஜய்யுடன் லியோ படத்தை அடுத்து கோட் படத்திலும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள திரிஷா, இப்போது அஜித்துடனும் விடாமுயற்சியை தொடர்ந்து குட் பேட் அக்லியிலும் நடிக்கப் போகிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!