
காமெடி படத்தில் அறிமுகமாகும் 3 ஹீரோயின்கள்
படத்தின் படப்பிடிப்புகள் நேற்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் கூறும் போது, "மூன்று கோணங்களில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இந்த படம் உருவாகிறது. படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான வித்தியாசமான காமெடி திரைக்கதை இது.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஐதராபாத், கோவை, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதோடு பாடல்களை துபாயில் பல படமாக்க இருக்கிறோம்" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!