அமரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து புதிய அப்டேட்
ஆக 08, 2024
Advertisement
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் "அமரன்" என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்று தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடுவதற்கான பணி நடந்து வருகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!