
சிறிய தமிழ்ப் படங்களிலும் நடிக்கும் மலையாள நடிகைகள்
அவர்கள் நடிகர் யார், தயாரிப்பு நிறுவனம் யார் என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என்றால் அதில் நடிப்பதற்கு முன் வருவார்கள். அப்படியான நடிகையர் இப்போதும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.
"வாழை" படத்தில் நடித்துள்ள நிகிலா விமல், "கொட்டுக்காளி" படத்தில் நடித்துள்ள அன்னா பென் ஆகியோர் இதற்கு சமீபத்திய உதாரணம். நிகிலா, அன்னா பொன் ஆகியோர் அவர்களது படங்களில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் படம் வெளிவந்த பின் அவர்களைப் பற்றிப் பேச வைக்கும் என படக்குழுவினர் சொல்கிறார்கள். தமிழக கிராமத்துப் பெண்களாகவே அவர்கள் மாறியுள்ளார்கள் என படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகிறது என்பது கூடுதல் சிறப்பு.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!