
ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் டப்பிங் ஆரம்பம்
"இந்தியன் 2" படம், "கேம் சேஞ்சர்" படம் இரண்டு படங்களையும் ஷங்கர் மாறி மாறி படப்பிடிப்பு நடத்தி வந்தாலும், வேறு சில பல காரணங்களாலும் இப்படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது. சமீபத்தில் ராம் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது. மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடந்தால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.
இதனிடையே, நேற்று ஐதராபாத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகி உள்ளது. அதற்கான பூஜையும் நடந்தது. அதில் தயாரிப்பாளர் தில் ராஜூ கலந்து கொண்டார். தொடர்ந்து மற்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். இந்த வருட கிறிஸ்துமஸ் நாளில் இப்படம் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!