
அனிருத் காப்பி சர்ச்சை… : சிங்கள இசையமைப்பாளர் மகிழ்ச்சி
அப்பாடல் பிரபல சிங்களப் பாடலான "மணிகே மகே ஹிதே" பாடலின் காப்பியாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்தனர். சிங்களத்தில் வெளியான அந்தப் பாடல் யு டியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பாடல்.
இந்நிலையில் சிங்களப் பாடலுக்கு இசையமைத்த சமத் சங்கீத், இந்த காப்பி சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதத்தில், “அனிருத்தின் படைப்புகளை எப்போதும் ரசிப்பவன். என்னுடைய பாடலான "மணிகே மகே ஹிதே" பாடலைப் போன்ற ஒரு பாடலை இசையமைக்க அவருக்கு தூண்டுகோலாக எனது பாடல் அமைந்தது எனக்கு மகிழ்ச்சிதான்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், இந்த காப்பி சர்ச்சைக்கு சம்பந்தப்பட்டவரே இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!