
பிளாஷ்பேக் : அதிகம் அறியப்படாத சிவாஜி படம்
1988ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சந்தானபாரதி இயக்கி இருந்தார். இதில் சிவாஜியுடன் வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, பல்லவி, சின்னி ஜெயந்த், மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.எஸ்.சந்திரன், விஜயகுமார், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்திருந்தது.
ஒரு சில தியேட்டர்களில் வெளியாகி ஒரு சில நாட்களே ஓடிய படம் இது. சிவாஜி அப்போது அரசியல் கட்சி தொடங்கிய நேரம் என்பதால் அப்போது ஆட்சியில் இருந்த கட்சி இந்த படத்தை முடக்கி விட்டதாக சொல்வார்கள். இதில் சிவாஜி மக்கள் சேவகனாக நடித்திருந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!