
பான் இந்தியா படமாக ரீமேக் ஆகிறது ஆடிவெள்ளி
இந்த படம் தற்போது பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் ரீமேக் ஆகிறது. ராம.நாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்.ராமசாமியின் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. உலகில் தீயசக்திகள் வீறுகொண்டு எழும்போது, தெய்வீக சக்தி விழித்துக் கொள்கிறது என்ற கருத்துடன் உருவாக்கப்படும் இந்த படத்தை பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி, ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 படங்களை இயக்கிய பி.வி.பரணிதரன் இயக்குகிறார்.
"ராம.நாராயணன் சினிமாட்டிக் யுனிவர்ஸ்" என்ற அறிவிப்புடன் வெளியாகும் இப்படத்தில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுகிறது. "ஜங்கிள் புக்" படத்துக்கு அகாடமி விருது வென்றிருக்கும் சிஜி நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!