
நிச்சயதார்த்தத்துடன் நின்றுபோன திருமணம் : மீண்டும் சிங்கிள் ஆன வில்லன் நடிகர்
கடந்த வருட இறுதியில் இவருக்கும் தனுஜா என்கிற மாடல் அழகிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணப்பெண் சைன் டாம் சாக்கோவின் நீண்ட நாள் தோழியும் கூட. அதே சமயம் கடந்த ஏப்ரல் மாதம் தாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கினார் சாக்கோ. இதனால் இவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டு விட்டது என்று பேசப்பட்டாலும் கூட மணப்பெண் தனுஜா தாங்கள் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தங்களுக்குள் பிரிவில்லை என்று அப்போதைக்கு அந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் தற்போது ஒரு பேட்டியில் சைன் டாம் சாக்கோ பேசும்போது, தான் இப்போது சிங்கிளாக இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். என்னதான் தான் உண்மையான அன்பு வைத்திருந்தாலும் கூட அந்த உறவை தன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள சாக்கோ தற்போது மீண்டும் டேட்டிங் ஆப் பக்கம் கவனத்தைத் திருப்பி பெண் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனக்கு பிடித்தமான பெண்ணை தேர்வு செய்வதிலும் அவர்களை கன்வின்ஸ் செய்வதிலும் நிறைய சவால்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!