
அன்பு தான் எல்லாமே என பேச வருகிறது மெய்யழகன்
படம் பற்றி இயக்குனர் பிரேம்குமார் கூறியிருப்பதாவது : அடிப்படையான அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம். இவ்வுலகில் வெறுப்பு என்பது பழகிபோன ஒன்றாகி விட்டது. என்னுடைய "96" படம் காதல் படம் இல்லை. அதுவும் அன்பை போதிப்பது தான். அதில் ரொமான்ஸ் கிடையாது. அன்போட முதல் புள்ளியாக 96" வைத்துக் கொண்டால் "மெய்யழகன்" இரண்டாவது புள்ளி. அன்பை விதைக்கிறதுக்கான முயற்சி தான் என் முதல் வேலை. மத்ததெல்லாம் அப்புறம்தான். அப்படி ஒரு நல்ல முயற்சியாக மெய்யழகன் இருக்கும். தஞ்சாவூர் நீடாமங்கலத்தில் நடக்கிற கதை. இரண்டு பேருக்கு இடையில் நடக்கிற உரையாடல் மனமாற்றம் தான் படம். "மெய்யழகன்" சொந்த ஊரை ஞாபகப்படுத்துவான். நாம் பேச வேண்டாம்ன்னு நினைச்சவங்க கிட்ட மன்னிப்பு கேட்க தோணும். படத்த பார்த்தவர்களிடமிருந்து அன்பு வெளிப்படும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!