
எங்கள் முடிவில் மாற்றமில்லை : நடிகர் சங்கத்திற்கு தயாரிப்பாளர்கள் பதில்
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. அதோடு தன்னிச்சையாக முடிவெடுப்பதா என்றும் கேட்டிருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பளார் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தனுஷ் மீது எந்த புகாரும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தயாரிப்பாளர் சங்க பொதுகுழுவில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் நடிகர் சங்கம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் சங்க உறுப்பினர்கள் நலன் காக்க நாங்களும் சில முடிவுகள் எடுக்க வேண்டியது வந்தது. நடிகர் சங்கம் தங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதை போலத்தான் எங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க ஏற்கனவே அறிவித்த நவ., 1 முதல் சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம். இதற்கு நடிகர் சங்கம் தகுந்த ஒத்துழைப்பு தரும் என்ற நம்புகிறோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!