
வயநாடு நிவாரண பணியில் நிகிலா விமல்
அந்த வகையில் நடிகை நிகிலா விமல், ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து நிவாரண உதவிகளில் ஈடுப்பட்டார். கண்ணூரைச் சேர்ந்த அவர், அங்குள்ள தலிம்பம்பா தாலுகாவின் நிவாரண மையத்தில் நிவாரண பொருட்களை மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோவை அவரது ரசிகர்கள் "கேரளாவை மீட்போம்" என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மலையாள நடிகையான நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ரங்கா, போர் தொழில் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள "வாழை" படம் விரைவில் வெளியாக இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!