
பிளாஷ்பேக் : 2 லட்சம் கவிதை எழுதிய பி.பி.ஸ்ரீனிவாஸ்
எந்த விழாவுக்கோ, திருமண நிகழ்வுக்கோ சென்றால். அந்த இடத்திலேயே அந்த விழா தொடர்பாகவோ அல்லது திருமண தம்பதிகளை வாழ்த்தியோ கவிதை எழுதி அங்கேயே வாசிப்பார். காதல் கவிதை, தத்துவ கவிதை, பக்தி கவிதை என தனி தனி கவிதைகளை தனி தனி வண்ண பேனாவில் எழுதுவார். இதனால் தனது சட்டைப் பையில் வண்ண வண்ண பேனாக்களை சொருகி வைத்திருப்பார்.
இதுதவிர "நவநீதசுமசுதா" என்ற புதிய ராகத்தை கண்டுபிடித்தார். ஏற்கெனவே உள்ள 7 ராகங்களோடு இந்த ராகத்தையும் இணைத்து "அஷ்டராகமாலிகா"வில் ஒரு பாடல் எழுதினார். இந்த பாடலை டி.கே.பட்டம்மாள் பாடினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!