
மீண்டும் பாலிவுட் படத்திற்கு இசை அமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்
இந்நிலையில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு படமான "ஸ்கை போர்ஸ்" படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்துக்கு கீரவாணி முதலில் இசை அமைப்பதாக இருந்தது. தயாரிப்பாளர் தினேஷ் விஜயனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தில் இருந்து கீரவாணி விலகினார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் அந்தப் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். "ஸ்கை போர்ஸ்" படத்தில் அக்ஷய் குமாருடன் சுனில் ஷெட்டி, நிம்ரத் கவுர், சாரா அலிகான் உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!