தக் லைப்-ல் இணைந்த நாசர், அபிராமி
ஜூலை 31, 2024
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லட்சுமி, மற்றும் பலர் நடிக்கும் படம் "தக் லைப்". இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கூடவே, டப்பிங் பணிகளையும் சேர்த்து முடித்து வருகிறார்கள்.
இன்னும் சில கட்ட படப்பிடிப்புகள் நடைபெற வேண்டி இருக்கிறது. அதில் வெளிநாட்டு படப்பிடிப்புகளும் அடங்கும் என்கிறார்கள். இந்நிலையில் நடிகர் நாசர், நடிகை அபிராமி ஆகியோர் இப்படத்தில் இணைவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கமல்ஹாசன் நடித்த பல படங்களில் நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிக்கும் அடுத்த படம் இது. நடிகை அபிராமி "விருமாண்டி" படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். அந்த பொருத்தமான ஜோடி பற்றி இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் ஒரு படத்தில் மீண்டும் பங்கேற்கிறார் அபிராமி. சமீபத்தில் வந்த "மகாராஜா" படத்தில் நடித்த அபிராமி "வேட்டையன்" படத்திலும் நடித்துள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!