
வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய அபிராமி!
தா.சே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "வேட்டையன்" . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மும்பை, கேரளா ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. ஆனால், இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நடிகை அபிராமி, வேட்டையன் படத்தில் தனது சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை தொடங்கியதாக படக்குழு பகிர்ந்துள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!