
கிளாசிக் படங்களை ரீமேக் செய்யக் கூடாது - ஜான்வி கபூர்
இப்படத்திற்கான புரமோஷன் பேட்டி ஒன்றில் ஜான்வி கலந்து கொண்ட போது அவரிடம் "மிஸ்டர் இந்தியா" படத்தை பற்றி ரீமேக் செய்வது பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜான்வி, “சில கிளாசிக் படங்களை கண்டிப்பாக ரீமேக் செய்யக் கூடாது. அவற்றை நாம் தொடவும் கூடாது,” என்றார்.
"மிஸ்டர் இந்தியா" படத்தினை ஜான்வியின் அப்பா போனி கபூர் தயாரிக்க, சித்தப்பா அனில் கபூர், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்திருந்தார். 1987ல் வெளிவந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. லட்சுமிகாந்த் பியாரேலால் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!