
தி கோட் பற்றி வந்த இரண்டு அப்டேட்ஸ்
செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள இப்படம் பற்றி புதிதாக இரண்டு அப்டேட்கள் கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டிற்குச் சென்று அங்கு "விடாமுயற்சி" படப்பிடிப்பில் இருந்த அஜித்தை சந்தித்தார் வெங்கட் பிரபு. அப்போது "தி கோட்" படத்தின் பாடல் ஒன்றின் வீடியோவைக் காட்டினாராம். அதைப் பார்த்து ரசித்த அஜித் உடனடியாக விஜய்க்கு போன் செய்து அதைப் பற்றிப் பாராட்டிப் பேசினாராம்.
மற்றொரு அப்டேட், சமீபத்தில் படத்தின் இடைவேளை வரையிலான முதல் பாதியை விஜய் பார்த்தாராம். பார்த்துவிட்டு படம் விறுவிறுப்பாக நகர்கிறது என்று சொன்னாராம். அதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்களாம்.
படம் வெளியாக இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் இது மாதிரியான அப்டேட்கள் அடிக்கடி வெளியாகலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!