
மகன் ஜேசன் சஞ்சய் பிறந்தநாள் : வாழ்த்து சொல்வாரா விஜய் ?
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு இன்று பிறந்தநாள். பலருக்கும் வாழ்த்துகளைச் சொல்லும் விஜய் அவரது மகனுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைச் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜேசனை இயக்குனராக அறிமுகப்படுத்த உள்ள தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ், “வளர்ந்து வரும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் பாதை வெற்றியாலும் முடிவில்லாத சாதனைகளாலும் நிரம்பட்டும். உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்,” என்று வாழ்த்தியுள்ளது.
ஜேசன் சஞ்சய்யை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறோம் என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் லைகா நிறுவனம் அறிவித்தது. அப்போதும் விஜய் எந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கவில்லை. இன்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!