கன்னட இயக்குனர் உடன் இணையும் சூர்யா?
ஜூலை 20, 2024
Advertisement
சிவா இயக்கத்தில் ‛கங்குவா" படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. அக்., 10ல் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து இப்போது வருகிறார் சூர்யா. இதன்பிறகு வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் கன்னட நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மப்டி என்ற கன்னட படத்தை இயக்கிய நார்தன் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த மப்டி படம் தான் தமிழில் சிம்பு நடிக்க ‛பத்து தல" என்ற பெயரில் ரீ-மேக்கானது. முதலில் பத்து தல படத்தை நார்தன் தான் இயக்கினார். சில பிரச்னைகளால் அவர் வெளியேற கிருஷ்ணா இயக்கினார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!