
புதிய விஷயத்தை பேச வருகிறது ரெட் பிளவர்
படம் பற்றி இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது “இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். விக்னேஷ் முதன் முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார். படத்திற்காக உடல் எடை குறைத்து பிட்டாக நடித்துள்ளார். இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயம் ஒன்றை பற்றி இந்த படம் பேசுகிறது. நாயகி மனிஷா ஜஷ்லானி துணிச்சலான பல காட்சிகளில் நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் நீச்சல் உடையில் பெரிய நடிகைகளுக்கு ஈடாக நடித்திருக்கிறார்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!