
விடுதலை 2க்கு பேருதவியாக அமைந்த மகாராஜா வெற்றி
அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வருடக் கடைசியிலேயே வெளியாகும் என்று சொன்னார்கள். ஆனால், முதல் பாகம் வெளிவந்து இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் வெளியாகவில்லை. இரண்டாம் பாகத்தில் "அசுரன்" நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டும் என்ற ஒரு தகவலும் இப்படம் பற்றி இருக்கிறது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு "விடுதலை 2" படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். விஜய் சேதுபதி நடித்து கடைசியாக வெளிவந்த "மகாராஜா" படம் வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது ஓடிடி தளத்தில் அந்தப் படம் டாப் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தைப் சாதகமாக்க "விடுதலை 2" முதல் பார்வையை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. "மகாராஜா"வின் வெற்றியால் "விடுதலை 2" படத்திற்கு வியாபார வட்டாரங்களில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதாம். அதனால், படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!