
முட்டாள் நடிகர்கள் - மன்னிப்பு கேட்ட பார்த்திபன்
"இந்தியன் 2" வெளியான அதே நாளிலேயே "டீன்ஸ்" படத்தை வெளியிட்டது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதோடு ஒரு யு டியூப் சேனலில் பார்த்திபன் பேசிய வீடியோ ஒன்றிற்கு "13 வேஷமும் நானே போடுறேன்னு சில முட்டாள் நடிகர்கள் இருக்காங்க,” என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
அந்த ஸ்கிரீன்ஷாட்டைப் பலரும் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இதற்கு முன்பு "நவராத்திரி" படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களிலும், "தசாவதாரம்" படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களிலும் நடித்திருந்தனர். அவர்களைத்தான் பார்த்திபன் அப்படிப் பேசியுள்ளாரோ என்ற சந்தேகத்தில் பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன.
அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக பார்த்திபன், “நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!