
ஆன்மிக உதவியால் வலியை கடந்து வலிமை ஆகிவிட்டேன் : சமந்தா
அதில், ‛‛வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற வேண்டுமென்று நினைப்போம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கக் கூடாது என்று தான் நினைக்கிறேன். என்றாலும் எதுவும் நம் கையில் இல்லை. வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். அனைவர் வாழ்க்கையிலும் பிரச்னைகள், வலிகள் இருக்கிறது. அதை நாம் எப்படி கடந்து வருகிறோம் என்பது தான் முக்கியம். அந்த வலியை கடந்து விட்டால் நாம் வெற்றியாளர்தான். அந்த வகையில் நான் தற்போது என்னை வலிமையானவளாக உணர்கிறேன். குறிப்பாக ஆன்மிகம் தான் எனது வலியை கடந்து வலிமை பெற எனக்கு உதவி செய்தது"" என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!