
டிரெயின் படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன்
இதற்காக கடந்த பல மாதங்களாக சென்னையில் டிரெயின் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் ஒருபுறம் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளில் ரயிலில் நிகழும் சம்பவத்தை மையமாக வைத்து ஆக் ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது. மிஷ்கினே இசையமைக்கிறார். இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாது பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் உள்ளார் ஸ்ருதிஹாசன். ஏற்கனவே பல படங்களில் பாடி உள்ளார். இப்போது டிரெயின் படத்தில் பாடியிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!