
சதுர் படத்தில் 5 ஆயிரம் வருட கதை
படம் பற்றி இயக்குனர் அகஸ்டின் பிரபு கூறும்போது “இப்படத்தில் 1,250 விஎப்எக்ஸ் ஷாட்டுகள் இருக்கிறது. தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லி, தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்றேன். பிறகு பைலட் படத்தை உருவாக்கிக் காட்டினேன். உடனே அவர் என்னை முழுமையாக நம்பினார்.
கடலுக்குள் நடக்கும் காட்சி மற்றும் கார்சேஸ், பிளைட் பைட், ஹிஸ்டாரிக்கல் காட்சிகள் உள்பட பிரமிக்கத்தக்க காட்சிகள் நிறைய இருக்கிறது. சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு கதை தொடங்குகிறது. 1945, 1967 ஆகிய காலக்கட்டங்களில் நடந்து, இறுதியில் இன்றைய வருடத்தில் முடிகிறது. அனைத்து ரசிகர்களுக்கும் "சதுர்" படம் புதிய அனுபவமாக இருக்கும். அடுத்தமாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!