
11 சைமா விருதுக்கு போட்டியிடும் ‛ஜெயிலர்
இந்த பட்டியலில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த "ஜெயிலர்" 11 விருதுகளுக்கும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த "மாமன்னன்" 9 விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரை பட்டியலின் முக்கிய பிரிவுகள் வருமாறு:
சிறந்த படம் : ஜெயிலர், மாமன்னன், லியோ, பொன்னியின் செல்வன் 2, விடுதலை.
சிறந்த நடிகர் : ரஜினிகாந்த் (ஜெயிலர்), விஜய் (லியோ), விக்ரம் (பொன்னியின்செல்வன் 2), சிவகார்த்திகேயன் (மாவீரன்), உதயநிதி ஸ்டாலின் (மாமன்னன்), சித்தார்த் (சித்தா).
சிறந்த நடிகை : திரிஷா (லியோ), நயன்தாரா (அன்னபூரணி), ஐஸ்வர்யாராய் (பொன்னியின்செல்வன் 2), கீர்த்திசுரேஷ் (மாமன்னன்), மீதா ரகுநாத் (குட்நைட்), ஐஸ்வர்யா ராஜேஷ் (பர்ஹானா).
சிறந்த இயக்குனர் : நெல்சன் (ஜெயிலர்), லோகேஷ் கனகராஜ் (லியோ), மணிரத்னம் (பொன்னியின்செல்வன் 2), வெற்றிமாறன் (விடுதலை), அருண் குமார் (சித்தா), மாரி செல்வராஜ் (மாமன்னன்).
சிறந்த குணச்சித்திர நடிகர் : வடிவேலு (மாமன்னன்), எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்), எஸ்ஜே.சூர்யா (ஜிகர்தண்டாடபுள்எக்ஸ்), சரத்குமார் (வாரிசு), வசந்த் ரவி (ஜெயிலர்).
சிறந்த குணச்சித்திர நடிகை : முல்லை அரசி (ஆர்யூ ஓகே பேபி). நதியா (லெட்ஸ் கெட்மேரிட்), அபர்ணதி (இறுகப்பற்று), சரிதா (மாவீரன்), ரெய்ச்சல் ரெபக்கா (குட் நைட்).
சிறந்த இசையமைப்பாளர் : இளையராஜா (விடுதலை), ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின்செல்வன் 2), அனிருத் (ஜெயிலர், லியோ), சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா), நிவாஸ் கே.பிரசன்னா (டக்கர்).
சிறந்த நகைச்சுவை நடிகர் : வடிவேலு (சந்திரமுகி 2), விடிவி கணேஷ் (டாடா), சுனில் (ஜெயிலர்), யோகி பாபு (மாவீரன், ஜெயிலர்), ரெடின் கிங்ஸ்லி (கான்ஜுரிங் கண்ணப்பன்).


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!