
ரஜினிகாந்த் டான்ஸ் ஆடலாமா : சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை
தமிழ் சினிமா உலகிலிருந்து நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். வட இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஆகியவற்றிற்குப் பஞ்சமிருக்காது. வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் முதியவர் வரை நடனமாடி திருமண நிகழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
திருமண வீட்டார் மட்டுமல்லாது, திருமணத்திற்கு வந்தவர்களும் அந்த கொண்டாட்டங்களில் ஆடிப்பாடி மகிழ்வார்கள். அப்படித்தான் அம்பானி வீட்டுத் திருமண நிகழ்வில் சக பிரபலங்களுடன் ரஜினிகாந்த் நடனமாடினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. ரஜினிகாந்த் போன்ற ஒரு உச்ச நடிகர் இப்படி நடனம் ஆடலாமா என்ற சர்ச்சையையும் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் "தலைவர் மாஸ், தலைவர் ஸ்டைல்" என அதையும் மகிழ்வுடன் பகிர்ந்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!