
காட்டில் ஒரு ஹாரர் திரில்லர் : ‛பேச்சி டிரைலரை வெளியிட்ட ஏஆர் முருகதாஸ்
ஜூலை 12, 2024
Advertisement
பால சரவணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சி. ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலரை தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். அந்த டிரைலரில், பால சரவணன், காயத்ரி சங்கர் தங்களது நண்பர்களுடன் ஒரு காட்டு பகுதிக்கு செல்கிறார்கள். அப்போது மலைவாழ் மக்கள் வாழும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அவர்கள் நுழைந்து விட, பெரும் ஆபத்துக்கள் அவர்களை துரத்துகிறது. இந்த ஆபத்திலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த பேச்சி படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!