
இந்தியன் 3-ல் வருகிறார் வீரசேகரன் சேனாபதி
அதில் சுதந்திரப் போராட்டக் காலக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் சேனாபதி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர் என சில காட்சிகள் மட்டும் இடம் பெற்றிருந்தது. அதை விரிவுபடுத்தி சேனாபதியின் அப்பா வீரசேகரன் கதாபாத்திரமும் "இந்தியன் 3"ல் வர உள்ளது.
முதல் பாகத்தில் மகன் சந்துரு, அப்பா சேனாபதி, இரண்டாம் பாகத்தில் அப்பா சேனாபதி மட்டும் இடம் பெற்ற நிலையில், மூன்றாம் பாகத்தில் சேனாபதி மற்றும் அவருடைய அப்பா வீரசேகரன் இடம் பெற உள்ளார்கள். அது மட்டுமல்ல வீரசேகரன் மனைவியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். 2025ம் ஆண்டில் "இந்தியன் 3" வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!