
தமிழை விட தெலுங்கில் இந்தியன் 2 டிக்கெட் கட்டணம் அதிகம்
தெலுங்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவில் பெரிய படங்களுக்கும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளிக்கும்.
அப்படி "இந்தியன் 2" படத்திற்கு தெலங்கானாவில் சிங்கிள் தியேட்டர்களில் அதிகபட்சமாக 236 ரூபாயும், அதிகபட்சமாக 383 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் படக்குழுவினர் 225 மற்றும் 350 ரூபாய் கட்டணத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமே 195 ரூபாய்தான்.
தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகும் ஒரு படத்திற்கு இவ்வளவு கட்டணமாக என சில தெலுங்கு மீடியாக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!