
20 படங்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் பக்கம் செல்லும் கவுதம் மேனன்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரையில் 20 படங்களை இயக்கியுள்ளார் கவுதம். தமிழில் அவர் வைக்கும் தலைப்புகள் கவிதை நடையில் இருக்கும் என பாராட்டுபவர்கள் அதிகம். அந்த அளவிற்கு தமிழ் மீது பற்று கொண்டவர். அவரது தாய்மொழியான மலையாளத்தில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இத்தனை படங்களுக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க உள்ளார்.
மம்முட்டியின் படத் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் ஆறாவது படத்தை கவுதம் மேனன் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று கொச்சியில் நடைபெற்றது. அதில் கவுதம், மம்முட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
கவுதம் கடைசியாக தமிழில் இயக்கிய "துருவ நட்சத்திரம்" படம் நிதிச்சிக்கலில் சிக்கி இன்னும் வெளியாகாமல் உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!