
இன்ஸ்டாவில் கணவர் ஜிவி பிரகாஷ் பெயரை நீக்கிய சைந்தவி
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி, பாடகி சைந்தவி ஆகியோரது பிரிவு அறிவிப்பு வந்த போது பல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பள்ளியில் படித்த காலத்திலிருந்து காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர். நான்கு வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கு திரையுலகினரும், ரசிகர்களும் வருத்தப்பட்டார்கள்.
தனது சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாவில் மட்டுமே ஆக்டிவ்வாக இருப்பவர் சைந்தவி. அதில்தான் தொடர்ந்து அப்டேட்டுகளைக் கொடுத்து வருகிறார். தனது கணவர் ஜிவி பிரகாஷ் உடனான பிரிவுக்கு முன்பாக "சைந்தவி பிரகாஷ்" என்று இருந்ததை, தற்போது "சைந்தவி" என்று மட்டும் வைத்து கணவரது பெயரை நீக்கியுள்ளார்.
இருந்தாலும் தனது முன்னாள் கணவர் ஜிவி பிரகாஷ் மற்றும் ஜிவியின் தங்கை நடிகை பவானிஸ்ரீ ஆகியோரை இன்னமும் பாலோ செய்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!