
திரிஷா நடித்த வெப் சீரிஸ் பிருந்தா ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் திரிஷா, தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக "விஷ்வம்பரா" படத்திலும், தமிழில் அஜித் ஜோடியாக "விடாமுயற்சி" படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கம் "தக் லைப்" படத்திலும், மலையாளத்தில் "ராம்" படத்திலும் நடித்து வருகிறார்.
திரிஷா முதன்முதலாக நடித்த தெலுங்கு வெப் சீரிஸ் "பிருந்தா" ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
திரில்லர் வெப் சீரிஸ் ஆக உருவாகியுள்ள இதில் திரிஷா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ், ஆம்னி மற்றும் பலர் இதில் நடித்துள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!