
ஆரம்பமானது கூலி படப்பிடிப்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அங்கு இப்படத்திற்காக பிரம்மாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம். அந்த அரங்கில்தான் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் பிரபலமானார்.
லோகேஷ், ரஜினிகாந்த் இணையும் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க விருப்பப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை.
சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில்தான் ரஜினிகாந்த் அதிகம் நடிக்க விரும்புகிறார். கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், தசெ ஞானவேல் ஆகியோரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் ரஜினியின் 171வது படம்.
அவரது 172வது படமாக "ஜெயிலர் 2" அல்லது கார்த்திக் சுப்பராஜ் படம் உருவாகலாம் எனத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!