
விஜய் சேதுபதி ஜோடியாக நித்யா மேனன்?
தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நித்யாவைக் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். கிராமம், திருவிழா, கூட்டுக்குடும்பம் என நகரும் ஒரு கதையில் நித்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் பேசி வருகிறார்கள்.
இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்த விஜய் சேதுபதி, இயல்பான நடிகை எனப் பெயரெடுத்த நித்யா மேனன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என முயன்று வருகிறார்கள். நித்யா ஓகே சொல்லிவிட்டால் படத்தின் அறிவிப்பு விரைவில் வந்துவிடும்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து மலையாளத்தில் 19(1)(a) என்ற படத்தில் நடித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!