
ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா மகாராஜா?
இந்த ஆண்டில் இதற்கு முன் வெளிவந்த படங்களில் "அரண்மனை 4" படம் மட்டுமே ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இரண்டாவது படமாக தற்போது "மகாராஜா" கடந்துள்ளது. ஆனால், குறுகிய காலத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஆனால், அவர் கதாநாயகனாக நடித்த ஒரு படம் ரூ.100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. இந்தப் படத்தின் வெற்றி மூலம் தனது முந்தைய தோல்விகளை அவர் சரி செய்துள்ளார். அவர் நடித்து வெளிவர உள்ள அடுத்த படங்களுக்கான வியாபாரமும் சிறப்பாக நடக்க வழி செய்துவிட்டார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இப்படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!