
ஜூலை 5ல் 5 சிறிய படங்கள் மட்டுமே ரிலீஸ்
அடுத்த வாரம் ஜூலை 12ம் தேதி பிரம்மாண்டப் படமான "இந்தியன் 2" படம் வெளியாக உள்ளது. அதனால் இந்த வாரம் ஜூலை 5ம் தேதியும், ஜூலை 19ம் தேதியும் மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பில்லை. அப்படி வெளியிட்டால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலைப் பெற முடியாது.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 5ம் தேதி 5 சிறிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. “7ஜி, எமகாதகன், கவுண்டம்பாளையம், தேரடி, நானும் ஒரு அழகி” ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய படங்கள் என்பதால் இவற்றில் கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றங்கள் வரலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!