
ரூ.500 கோடி வசூலைக் கடந்த கல்கி 2898 ஏடி
அந்த 500 கோடியில் அமெரிக்க வசூல் மட்டுமே 83 கோடி. அங்கு 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. முதல் வார இறுதியில் வேறு எந்த ஒரு இந்தியப் படமும் இந்த அளவிற்கு வசூலித்ததில்லை என அங்கு படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இப்படம் பெறும் வசூல் குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
"பாகுபலி 2" படத்திற்குப் பிறகு பிரபாஸிற்கு இந்தப் படம் பெரிய வசூலை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை டோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!