
தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாருக்கு 6 மாதம் சிறை
கடந்த 2017ல் பைனான்சியர் ககன் போத்ராவிடம் ரூ.45 லட்சம் கடன் பெற்றுள்ளார் சதீஷ் குமார். கடனை திருப்பி செலுத்துவதற்காக இவர் அளித்த செக், வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்தது. இதையடுத்து சதீஷ் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ககன் போத்ரா. இந்த வழக்கு நீதிபதி சந்திரபிரபா முன் விசாரணைக்கு வந்தது. பணத்தை திரும்ப தராத சதீஷிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு கடனையும் வட்டியுடன் திரும்ப செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!