
மீண்டும் ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி : இயக்குனர் யார் தெரியுமா?
தமிழில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சேதுபதிக்கு, சமீபத்தில் வெளியான "மகாராஜா" படம் பெரும் வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. இப்படத்தை அடுத்து "ஏஸ், டிரைன்" ஆகிய படங்கள் அவர் நடிப்பில் வெளியாக உள்ளன.
தமிழில் தொடர்ந்து வெற்றி பெறாமல் போனதற்கு மற்ற மொழிகளிலும் நடித்ததுதான் காரணம் என நினைத்த விஜய் சேதுபதி, இனி மற்ற மொழிகளில் நடிப்பதைத் தவிர்க்க முடிவெடுத்தார். இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் விஜய் சேதுபதியை சென்னைக்கு வந்து சந்தித்துப் பேசினார். அப்போதே இருவரும் இணைந்து படம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது.
இப்போது அது உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். ஹிந்தியில் தயாராக உள்ள அந்தப் படத்தில் நானா படேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!