
கல்கி 2898 ஏடி - ஆந்திர அரசு அறிவித்த டிக்கெட் கட்டண உயர்வு
இப்படத்திற்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து ஆந்திர மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி சிங்கிள் தியேட்டர்களில் 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 125 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானா அரசு சிங்கிள் தியேட்டர்களுக்கு 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 100 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது.
ஆந்திர அரசு அறிவித்த டிக்கெட் கட்டண உயர்வால் தற்போது சிங்கிள் தியேட்டர்களில் 236 ரூபாய் கட்டணமும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 324 ரூபாயும் இருக்கும். மேலும், இரண்டு வாரங்களுக்கு தினசரி 5 காட்சிகள் நடத்திக் கொள்ளவும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்துடன் ஒப்பிடும் போது ஆந்திர மாநிலத்தில் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் குறைவுதான். புதிதாக உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் படத்தின் வசூல் தொகை அதிகமாகும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!