
காக்கிச் சட்டையில் மீண்டும் கலக்கும் விஜயசாந்தி
சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் குதித்த விஜயசாந்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2020ல் மகேஷ்பாபு நடித்து வெளிவந்த "சரிலேரு நீக்கெவ்வரு” படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
இந்நிலையில் பிரதீப் சிலுகுரி இயக்கத்தில் கல்யாண் ராம் கதாநாயகனாக நடித்து வரும் அவரது 21வது படத்தில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஆக நடிக்கிறார் விஜயசாந்தி. இன்று விஜயசாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அறிமுக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். 30 வருடங்களுக்கு முன்பு எப்படி அந்தக் கதாபாத்திரத்தில் இருந்தாரோ அதே வேகத்தில் இப்போதும் நடித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!