
2050ல் நடக்கும் கதையா தி கோட்?
இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கிறார் என்பது படத்தின் முதல் பார்வை வெளியிட்ட போதே தெரிய வந்தது. இன்று வெளியான வீடியோவில் அவர்களிருவரும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளனர். அவர்கள் அப்பா, மகனா, அல்லது அண்ணன், தம்பியா என்பதும் தெரியவில்லை.
வீடியோவின் மூலம் கதை என்னவென்பதை புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. இருந்தாலும் டீசர் முடிவில் சில வினாடிகளில் நிறைய துண்டுக் காட்சிகள் வேகமாகக் கடந்து போகிறது. அதில் ஒரு காட்சியை நிறுத்திப் பார்த்தால் அதில் ஒரு டிவியில், “Peak Of 11 Billion In 2050” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே இந்தப் படம் ஒரு "டைம் டிராவல்" கதை என்று செய்திகள் வெளிவந்தது. எந்தெந்த காலகட்டங்களில் கதை பயணிக்கப் போகிறது என்பதும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!