
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இபிஎஸ், கமல்
நடிகர் விஜய் இன்று(ஜூன் 22) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காலை முதலே அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக.,வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்"" என தெரிவித்துள்ளார்.
கமல்
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"" என தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!