
ஆர்ஜே பாலாஜியின் புதிய படம் அறிவிப்பு
இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 3" என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடித்த "மூக்குத்தி அம்மன்" படம் வெற்றி அடைந்தது. அதன்பிறகு பாலாஜி நடித்த வீட்ல விஷேசம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் படம் சுமாரன வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்திற்கு "மாசானி அம்மன்" என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் மாசானி அம்மனாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது காமெடி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது. படத்தின் இயக்குனர் யார் என்பதை கூட இந்த அறிவிப்பில் வெளியிடப்படவில்லை. "குட்நைட்" படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கலாம் என்று தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!