
50 கோடி கிளப்பில் இணைந்த மஹாராஜா
படம் கடந்த 14ம் தேதி வெளியானது. படத்தின் வெற்றிக் கொண்ட்டாட்டத்தை படக்குழுவினர் கடந்த 19ம் தேதி கொண்டாடினர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி படம் வெளியான ஒரு வாரத்தில் 55 கோடியே 8 லட்சம் வசூலித்துள்ளதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் மஹாராஜா 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!