
வில்லன் ரோலை விரும்பும் கமல்
விழாவில் பேசிய கமல், ‛‛ஹீரோவை விட வில்லனாக நடிக்கவே எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஹீரோயினுக்காக ஹீரோ காத்திருந்து காதல் பாட்டு எல்லாம் பாட வேண்டும். ஆனால் வில்லன் அப்படியில்லை தனக்கு பிடித்ததை செய்வான் கல்கியில் அதைத்தான் நான் மகிழ்ச்சியாக செய்திருக்கிறேன். சாதாரண மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்வார்கள். எனது குருநாதர் கே.பாலசந்தர் பார்க்க அரசு அதிகாரி போன்று இருப்பார். ஆனால் அவர் அற்புதமான படங்களை இயக்கினார். அதேப்போல் இயக்குனர் நாக் அஸ்வினும் அசாதாரணமானவர் தான், பாராட்டுக்குரியவர்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!