
தமிழில் வெளியாகும் சாய் தன்ஷிகாவின் தெலுங்கு படம்
இந்த படத்தை ஸ்ரீசித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி.ராஜேஸ்வர ராவ் தயாரித்துள்ளார். அபிராமு இயக்கியுள்ளார். விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராம், சத்ய பிரகாஷ், தீவாளி தீபு, நாக மகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். என்.சுதாகர் ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கோட்டி இசை அமைத்துள்ளார். படம் நாளை வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் அபிராமு கூறும்போது "1978ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "சட்டம் என் கையில்" படத்தின் கதைக்கும், இப்படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை. தலைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கக்கூடிய சர்வசக்தி படைத்த ஜமீன்தாரின் குடும்பத்துக்கும், நீதிக்காக கடுமையாகப் போராடும் ஏழைப் பெண்ணுக்கும் நடக்கும் யுத்தம்தான் கதை. தனி நபராக சட்டத்தின் முன்பு போராடி, தனது கையால் தீர்ப்பு கொடுத்த வீரதீர பெண்ணைப் பற்றிய படம் இது" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!