
தள்ளிப்போன புஷ்பா 2 ரிலீஸ் : 40 கோடி நஷ்டம் ?
படம் தள்ளிப் போனதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தன் நண்பருக்காக அல்லு அர்ஜூன் பிரச்சாரம் செய்து தற்போதைய புதிய ஆட்சியாளர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டுள்ளார். அவரது உறவினரான பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்குப் போவதைத் தவிர்த்தார் அல்லு அர்ஜூன். தற்போது இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை என்கிறார்கள்.
மேலும் படத்தின் வேலையை திட்டமிட்டபடி முடிக்க முடியாததும் ஒரு காரணமாம். இப்படத்திற்காக பஹத் பாசில் கொடுத்த தேதிகளை பயன்படுத்தாமல் விட்டுள்ளார்கள். தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்க தேதிகளைக் கொடுத்ததால் "புஷ்பா 2" குழு கேட்ட போது அவரால் தேதிகளைத் தர முடியவில்லையாம். சமீபத்தில்தான் அவர் தேதிகளை ஒதுக்கியதாகவும் ஒரு தகவல்.
இப்படி சில காரணங்களை அடுத்து படத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேல் நஷ்டம் வரலாம் என்பது டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!